புதுவையில் இலவச அரிசி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டுமெனவும் பாஜக எம்.எல்.ஏக்கள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து மனு அளித்தனர்.
புதுச்சேரியில் தொடர்ந்து இலவச அரிசியை வழங்க வேண்டுமென சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில், இலவச அரிசி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வலியுறுத்தியும் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சாமிநாதன், செல்வகணபதி மற்றும் சங்கர் ஆகியோர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சாமிநாதன், இலவச அரிசி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 17 மாத பணத்தினை குடும்ப அட்டை தாரர்கள் வங்கி கணக்கில் செலுத்ததாமல், வேறு திட்டதிற்கு பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டினார்.
Discussion about this post