டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் துவங்கியுள்ளது.
மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வரும் 5ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், பாஜக எம்பிக்களின் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் துவங்கியுள்ளது. இதில், நாடாளுமன்றத்திலும், தொகுதி வளர்ச்சிப் பணிகளிலும் எம்.பிக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பேசுகின்றனர். மேலும் பட்ஜெட் தாக்கல் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டம் கடந்த 25ம் தேதி நடைபெறவிருந்த நிலையில், ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான மதன்லால் சைனி மறைவையடுத்து ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post