நாதுராம் கோட்சேயைத் தேசபக்தர் எனக் கூறியதற்காக பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
போபால் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா தாக்கூர் மக்களவையில் பேசும்போது நாதுராம் கோட்சேயைத் தேசபக்தர் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவருக்குக் கண்டனம் தெரிவித்த பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புத் துறைக்கான ஆலோசனைக் குழுவில் இருந்து அவரை நீக்குவதாக அறிவித்தார். பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவும் அவருக்குத் தடை விதித்தார்.
இந்நிலையில் மக்களவையில் பேசிய பிரக்யா சிங், நாதுராம் கோட்சேயைத் தேச பக்தர் எனக் கூறியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். மகாத்மா காந்தி மீது தான் மிகப்பெரும் மரியாதை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். தன்னுடைய கருத்து திரித்துக் கூறப்பட்டதாகவும், நீதிமன்றமே தன்னைக் குற்றமற்றவர் என விடுவித்துவிட்ட போதும், சிலர் தீவிரவாதி எனக் கூறுவது மிகுந்த வேதனையளிப்பதாகவும் பிரக்யா தெரிவித்தார்.
Discussion about this post