தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு பாஜக பாடுபடும் என தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை பாஜக தலைவராக நயினார் நகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், கட்சி பாகுபாடு இன்றி தமிழக மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருவதாக கூறினார்.
தமிழ்நாட்டில் தாமரை மலராது என சிலர் கூறி வந்த நிலையில் 4 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை செல்வதை வெற்றியாக கொண்டாடி வருவதாக எல்.முருகன் குறிப்பிட்டார்
Discussion about this post