சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவியும் கோவை தெற்கு எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்பொழுது, தமிழகத்தில் 2 நாள் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்படும் என சுகாதார துறை செயலாளர் தெரிவித்தார். மத்திய அரசு 4.20 லட்சம் தடுப்பூசிகளை தந்தது. இதில் சென்னைக்கு அடுத்தப்படியாக கோவைக்கு அதிகமான தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டு அதிகமான இடங்களில் போடப்பட தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக மத்திய அரசுக்கும் மாநிலத்தின் முதலமைச்சருக்கும் கோவைக்கு அதிகமாக தடுப்பூசிகளை அனுப்பிய மாநில சுகாதார துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து உள்ளன. தமிழகத்திலும் மாணவர்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்த கருத்தை தான் பா.ஜ.க. மாநில தலைவர் முருகனும் கூறியுள்ளார். ஒவ்வொரு நாளும் தேர்வு நடக்குமா நடக்காதா என்று மாணவர்களும் பெற்றோர்களும் தவித்து கொண்டு உள்ளனர். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்.
பல்வேறு புதிய திட்டங்களுக்கும் நலத்திட்ட உதவிகளையும் முதன்முறையாக முதலமைச்சர் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு வழங்கி உள்ளார். முன்கள பணியாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும் பணியும் நடந்து உள்ளது. இதில் தூய்மை பணியாளர்களும் இணைக்கப்பட வேண்டும். கொரோனாவின் தாக்கம் கிராமப்புறங்களில் பரவி உள்ளதால் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் உள்ள தூய்மை பணியாளர்களும் ஒப்பந்த பணியாளர்களாக தூய்மை பணியாற்றும் அவர்களையும் சேர்க்கப்பட்டு இழப்பீட்டு தொகையை மாநில அரசு வழங்க வேண்டும்.
பிளஸ் 2 தேர்வு வேண்டாம் என்று வலியுறுத்தி வருகிறோம். நீட் தேர்வு அடுத்த கட்டமாக வரக்கூடியது. மாநிலத்தில் புதிதாக வந்துள்ள ஆளும் கட்சி மக்களிடத்தில் வைத்து உள்ளனர். நீட் தேர்வு குறித்து எப்படி இருப்பார்கள். சட்ட ரீதியாக எப்படி என்பதை பின்னர் பார்க்கலாம். தற்போது பிளஸ் 2 தேர்வில் மாநில அரசு உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்.
பிரமாணர்கள் எதிர் என்று ஜஸ்டிஸ் காலத்தில் இருந்து அளவிடாக எடுத்து செல்லப்படுகிறது. பட்டியல் இனத்தவர்களை ஜாதி ரீதியாக குறிப்பிடுவது தவறு சட்டத்தில் இருக்கிறது. பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்தாலும் முற்படுத்தப்பட்ட சமுதாயமாக இருந்தாலும் ஜாதி பெயரை சொல்லி இழிவுப்படுத்துவது கூடாது.
ஒட்டுமொத்தமாக பிளஸ் 2 தேர்வு எழுதக் கூடிய எண்ணிக்கையின் அடிப்படையில் இன்றைய சூழலில் பாதுகாப்பாக தேர்வு எழுத முடியுமா. பாதிப்பு அதிகமாக இருக்க கூடிய மாநிலம் தமிழகம். இதை நம் பார்க்க வேண்டும்.
செங்கல்பட்டு தடுப்பூசி மையம் திறப்பது குறித்து முதலமைச்சரின் கடிதத்தை மத்திய அரசு பரிசிலிக்கிறது. டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர்களை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான விசயங்களை சொல்லி மத்திய அரசு முலமாக தமிழகத்திற்கு எது அவசிய தேவையாக உள்ளதோ அதை வலியுறுத்துவேன் என கூறினார்.
Discussion about this post