கடந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒப்பிடும்போது, 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் மிசோரமை தவிர்த்து, மற்ற 4 மாநிலங்களில் பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.
சத்தீஷ்கர் மாநிலத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 49 சதவீத வாக்குகளை பா.ஜ.க. அள்ளியது. ஆனால் தற்போது, சட்டமன்றத் தேர்தலில் அங்கு 33 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
ராஜஸ்தானில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, பா.ஜ.க. 55 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால் சட்டமன்றத் தேர்தலில் 38 சதவீத வாக்குகள் மட்டுமே அக்கட்சிக்கு கிடைத்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, 54 சதவீத வாக்குகளை பெற்ற பா.ஜ.க. தற்போது 41 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
தெலங்கானாவில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது 8.50 சதவீத வாக்குகளை பெற்ற பா.ஜ.க. சட்டமன்றத் தேர்தலில் 7 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
மிசோரமில் பூஜ்ஜியமாக இருந்த பா.ஜ.கவின் வாக்கு சதவீதம், இந்த சட்டமன்றத் தேர்தலில் தற்போது 8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
Discussion about this post