டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக தகவல்கள் வெளிகாகியுள்ளன.
மக்களவை தேர்தல் நெருங்கிவருவதால் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா கடந்த சில மாதங்களாக பல்வேறு நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்நிலையில், திடீரென உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அமித் ஷாவிடம் நலம் விசாரித்தனர். இதனிடையே அமித் ஷாவுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பதாகவும், அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post