ஹரியானா மாநிலத்தில், ஜன்நாயக் ஜனதா கட்சி ஆதரவு அளித்ததை அடுத்து, பாஜக மீண்டும் அங்கு ஆட்சியை அமைக்கிறது.
90 தொகுதிகளை கொண்ட ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில், 40 தொகுதிகளை கைப்பற்றிய பாஜகவிற்கு, ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் தேவைப்பட்டது. இதனையடுத்து 10 தொகுதிகளை கைப்பற்றிய ஜன்நாயக் ஜனதா கட்சியுடன், பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் தற்போது, ஜன்நாயக் ஜனாதா கட்சி, பாஜவிற்கு ஆதரவளித்துள்ளது. இதுதொடர்பாக, பா.ஜ.க தலைவர் அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், ஜ.ஜ.க, கட்சிக்கு துணை முதல்வர் பொறுப்பை வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து ஹரியானாவில் பாஜக-ஜேஜேபி கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. முன்னதாக, பாஜகவிற்கு 6 சுயேட்சைகள் தங்கள் ஆதரவை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post