எதிர்கட்சிகளை மிரட்டும் வகையில் மோடி அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இதுகுறித்து தேர்தல் ஆணையரிடம் புகாரளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பாஜக அரசை வீழ்த்த வேண்டும் என்று மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்கட்சிகள் ஒன்று திரண்டுள்ளன. இந்நிலையில், மேற்கு வங்க தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, எதிர்கட்சியினருக்கு சாதாரணமாக நோட்டீஸ் அனுப்பி அவர்களை விசாரணைக்கு அழைக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா அரசியலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட பின்பே அவரது கணவர் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இவ்வாறு மக்களவை தேர்தலை மையமாக கொண்டு, இதுபோன்ற செயல்களில் மத்திய பாஜக அரசு ஈடுபடுவது குறித்து தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post