தமிழகத்தில் பா.ஜ.க.வின் கூட்டணி கதவுகள் திறந்தே உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரக்கோணம், கிருஷ்ணகிரி, ஈரோடு, கடலூர் மற்றும் தர்மபுரி ஆகிய இடங்களில் உள்ள பூத் கமிட்டி உறுப்பினர்களிடம் டெல்லியிலிருந்து பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களைத் பிரதமர் தெரிவித்தார்.
பின்னர் கிருஷ்ணகிரி மாவட்ட பூத் கமிட்டி உறுப்பினர் தமிழகத்தில் பா.ஜ.க.வின் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய மோடி, தமிழகத்தில் பா.ஜ.க.வின் கூட்டணி கதவுகள் திறந்து உள்ளதாக தெரிவித்தார். பழைய கூட்டணி கட்சிகளுடன் உறவை புதுப்பிக்க விரும்புவதாகவும் மோடி தெரிவித்தார். அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை விட மக்களுடன் கூட்டணி வைப்பதையே பா.ஜ.க. விரும்புவதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post