மத்திய அமைச்சரும் பா.ஜ.க தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்னை வந்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான வலுவான கூட்டணியை அமைக்க அதிமுக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தநிலையில் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக மத்திய அமைச்சரும், பா.ஜ.க தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
Discussion about this post