பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக நட்சத்திர வேட்பாளர்கள்

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பெரும்பான்மையான நட்சத்திர வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளர் ஷாலினி யாதவை தோற்கடித்து பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் வேட்பாளர் சி.ஜெ.சௌடாவை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி, அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

அதேசமயம் காங்கிரஸ் கட்சியில் சில தலைவர்கள் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர். அமேதி தொகுதியில் தோல்வி அடைந்தபோதும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுனீரை வீழ்த்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றிபெற்றுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கை தோற்கடித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவருமான சோனியா காந்தி வெற்றிவாகை சூடினார். இதேபோல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் பாஜக மூத்த தலைவர் கும்மனம் ராஜசேகரனை வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் வெற்றிபெற்றுள்ளார்.

Exit mobile version