மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிகட்சி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகவுள்ளது.
Discussion about this post