மார்கழி மாத பிறப்பையொட்டி விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல இன்று ஒரு நாள் மட்டும் வனத்துறை சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாளில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் மார்கழி மாத பிறப்பையொட்டி இன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை ஒரு நாள் மட்டும் சிறப்பு அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் ஓடை பகுதியில் நீர் வரத்து குறைந்துள்ளதால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post