உடுமலை நகராட்சி குப்பைக்கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையில் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது
உடுமலை நகராட்சியில், நாள் ஒன்றுக்கு, 28 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பையானது கணபதிபாளையத்திலுள்ள குப்பைக்கிடங்கில் சேகரிக்கப்பட்டு, உரமாக மாற்ற திட்டமிடப்பட்டது.தற்போது அங்கு அதிகளவில் குப்பை தேங்கியுள்ள நிலையில், அவற்றை ’பயோ மைனிங்’ முறையில் அகற்ற, 2 கோடியே 22 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது பணிகள் நடந்து வருகின்றன.கனரக இயந்திரங்கள் மூலம், குப்பைகள் தனித்தனியாக குவிக்கப்படுகிறது. பின்னர், மக்கும் குப்பைகள் தனியாக பிரிக்கப்பட்டு உரமாக தயாரிக்கப்படுகின்றன. மறு சுழற்சிக்கு பயன்படாத மக்காத குப்பை, பிளாஸ்டிக், துணி உள்ளிட்டவை தனி தனியாக சேகரிக்கப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு பாய்லர் எரிப்பதற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
Discussion about this post