ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிக்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது. இதன் படி, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாக செயல்படும். அங்கு துணை நிலை ஆளுநரும் செயல்படுவார். லடாக், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக செயல்படும். அங்கு துணை நிலை ஆளுநர் மட்டும் செயல்படுவார். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரை பிரிக்கும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களைவியில் தாக்கல் செய்தார். நீண்ட விவாதத்திற்கு பிறகு மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 61 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து ஜம்மு காஷ்மீரை பிரிக்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post