மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரான பில்கேட்ஸ் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
பில்கேட்ஸ் 1975ம் ஆண்டு பால் ஆலென் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, கடந்த 2000 ஆம் ஆண்டு வரை பில்கேட்ஸ் பதவி வகித்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல், மைக்ரோசாப்ட் நிறுவத்திற்கு தினந்தோறும் செல்வதை குறைத்துக்கொண்டு, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை நிர்வகிப்பதில் அதிக கவனம் செலுத்திவந்தார்.
இந்தநிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பில்கேட்ஸ், இயக்குநர்கள் குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மக்கள் சேவையில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக பதவி விலகியுள்ளதாகவும், தலைமைச் செயலதிகாரி சத்யா நாதெல்லா மற்றும் நிர்வாகிகளுக்கு அவர் தொழில்நுட்ப ஆலோசகராக தொடர்ந்து பணியாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post