சென்னை மாநகராட்சி மற்றும் கிண்டி ரேஸ் கிளப் டி டேபிள் பிரண்ட்ஸ் சார்பில் டெங்கு நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மிதிவண்டி தொடர் ஓட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு 1.1.2019 முதல் ஒரு முறை பயன்படுத்தி எரியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், டெங்கு நோய் தடுப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில், கிண்டி ரேஸ் கிளப்பில் இருந்து மகாபலிபுரம் வரை 50 கிலோ மீட்டர் வரையிலான மிதிவண்டி தொடர் ஓட்டம் நடைபெற்றது.
ஆணையாளர் பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்த இந்த ஓட்டத்தில், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை மிதிவண்டிகளில் ஏந்தியவாறு சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.