அமெரிக்க டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்சை வீழ்த்தி இளம் வீராங்கனை ஆண்ட்ரஸ்கு சாம்பியன் பட்டம் வென்றார்.
நியூயார்க்கில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும் கனடாவின் பியான்கா ஆண்ட்ரஸ்குவும் மோதினர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த பியான்கா 6-3, 7-5 என்ற நேர் செட்டுகளில் செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
37 வயது நிரம்பிய செரீனா இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இப்போட்டியில் வென்று உலக சாதனை படைப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இளம் வீராங்கனை ஆண்ட்ரஸ்கு பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.