இந்தியின் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் அடுத்த 2 அல்லது 3 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் அவர் பந்து வீசிய போது (தொடை பகுதியில்) தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் பாதி ஆட்டத்திலிருந்தே அவர் வெளியேறினார். மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 2 அல்லது 3 போட்டிகளில் விளையாட வேண்டாம் என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.
புவனேஸ்வர் குமார் விலகல் குறித்து கருத்து தெரிவித்த கேப்டன் விராட் கோலி, “புவனேஸ்வர் குமாரின் பங்கு தொடரின் இறுதி கட்ட ஆட்டங்களில் முக்கியமானது என்பதால் அடுத்து வரும் 2 அல்லது 3 போட்டிகளில் அவர் விளையாட மாட்டார்” அன்று கூறிய அவர், “ஷமி இருப்பதால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பற்றி கவலைப்பட தேவையில்லை” என்று கூறினார்.
Discussion about this post