பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. இந்த அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கருர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை முதல் வினாடிக்கு ஆயிரத்து 964 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 58.99 அடியாகவும், நீர் இருப்பு 6.9 டிஎம்சியாகவும் உள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக 205 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post