குறைபாடு என்பது, நம் உடம்பில் இல்லை, மனதில்தான் இருக்கிறது என்னும் வாக்கியத்திற்கு ஏற்ப, சவால் விட்டு சாதனை புரிந்து வருகிறார் பெண் ஒருவர் …அவர் யார்?
29 வயதான பெத்தானி ஹமில்டன் சிறந்த நீர் சறுக்கு வீரர் ஆவார்.தனது வாழ்க்கையில் குறைபாடு என்பது உடம்பில் இல்லை மனதில்தான் இருக்கிறது என்னும் வார்த்தைக்கு ஏற்ப தொடர்ந்து ஓடிகொண்டிருப்பவர் பெத்தானி ஹமில்டன் ஆவார்.
2013 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொடுர விபத்தில் கையை இழந்த பெத்தானி ஹமில்டன் தன் வாழ்க்கையில் சோர்ந்து விடாமல் தொடர்ந்து ஓடிகொண்டே இருக்கிறார்.தனது 23 வயதில் ஹவாய் கடற்கரையில் நீர்சறுக்கில் ஈடுபட்டிருக்கும்போது சுறா ஒன்று அவரை தாக்கியது இந்த விபத்தின் போது அவரின் உடம்பில் உள்ள 60 சதவீத ரத்தமும் வெளியேறியது, இந்த தாக்குதலில் பெத்தானி ஹமில்டன் தனது இடது கையை முற்றாக இழந்தார்.
இருப்பினும் பெத்தானி ஹமில்டன் தனது குறைபாடு கருதி சோர்ந்து விடாமல் போராடினார், தனது வாழ்வில் தொடர்ந்து நீர்ச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டு ஏராளமான வெற்றிகளைப் பெற்றார் பெத்தானி, இதுமட்டும் அல்லாமல் நீர்சறுக்கு விளையாட்டில் உலகப் புகழ்பெற்ற பெண் ஆக கருதப்பட்டுவந்தார் ,பெத்தானியின் காதலன் அடம் டேர்க்ஸ் இந்த விபத்து குறித்து மனம்தளராமல் பெத்தானிக்கு ஊக்கம் அளித்ததோடு , பெத்தானியை திருமணமும் செய்துகொண்டார்.
வாழ்க்கையில் தன் குறைபாடுகளை கடந்து வழ்வின் இலக்கை நோக்கி ஒடிகொண்டிருக்கும் பெத்தானி ஹமில்டன் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு மிகபெரிய உந்துசக்தியே ஆவார்.
மேலும் பெத்தானி ஹமில்டன் தனது சுயசரிதை நூலை 2004ஆம் ஆண்டில் வெளியிட்டார் மற்றும் இவரின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு சோல் சேர்பர் எனும் திரைப்படமொன்று 2011ஆம் ஆண்டு வெளியாகி பெரு வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post