வேலூர் மாவட்டம் முழுவதிலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தர்பூசணி பழம் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக, பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக, இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட நீர் சத்து நிறைந்த பழமான தர்பூசணி பழத்தை, விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். மேலும், தர்பூசணி பழத்தை தங்களது வீடுகளுக்கும் வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக, ராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும், தர்பூசணி பழ விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று, நல்ல லாபம் பெறுவதாகவும் வியாபாரிகள் பெரு மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post