உதகையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடியை 11 மணி நேர போராட்டத்திற்கு பின், வன துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி வன விலங்குகள் குடியிருப்பு பகுதியில் வந்து செல்கின்றன. இந்நிலையில் உதகை நகரத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் கரடி ஒன்றை நாய்கள் விரட்டி செல்வதை பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், கரடியை 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்பு கரடியை முதுமலை வனப் பகுதிக்குள் விட்டனர். இதனால் உதகை நகரில் நிலவிய பரபரப்பு முடிவிற்கு வந்தது.
Discussion about this post