இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் பங்கேற்க தமிழ்நாடு உள்பட 8 சங்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ம் தேதி மும்பையில் நடக்க உள்ள நிலையில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்நிலையில், மாநிலம் மற்றும் அரசு விளையாட்டு அமைப்புகளின் சில சங்கங்கள், கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு மாநில நிர்வாகிகள் தேர்தலை நடத்தாத காரணத்தால், தமிழ்நாடு, அரியானா, மாகாராஷ்டிரா உள்பட 8 சங்கங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Discussion about this post