மத்தியக் குழு ஆய்வு செய்து சென்ற பிறகும் இன்னும் நிதியளிக்காதது வருத்தமளிப்பதாக கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாஸ்கரன், பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஐ.ஏ.எஸ் அதிகாரி
முதல் அனைத்து அதிகாரிகளும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார். இதற்கிடையில் புயல் பாதிப்பு குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்து சென்ற பிறகும், நிதியளிக்காதது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். புயலால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது கண்ணில் நீரை வரவழைக்கிறது என்று கூறிய அமைச்சர், விரைவில் விவசாயிகளின் கவலை தீர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post