நடப்பு நிதியாண்டின் கடைசி தினமான மார்ச் 31ம் தேதியையொட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நிதியாண்டின் கடைசி நாள் வரும் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. விடுமுறை தினமான அன்றைய தினம் வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி அலுவலகங்களும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதியாண்டின் இறுதி தினத்தில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பல்வேறு கணக்குகளை முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் என்பதால் அன்றைய தினம் வங்கிகள் வழக்கம்போல செயல்பட அறிவுறுத்தியுள்ளது.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளுடன் தொடர்புடைய வங்கிகள் தங்களது கவுண்டர்களை வழக்கம்போல திறந்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, நாளை வங்கிகளை இரவு 8 மணிவரை திறந்து வைக்கவும், இதேபோல நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிவரை திறந்துவைக்கவும் உத்தரவிட்டுள்ளது.