ஏடிஎம் கார்டுகளைக் கொண்டு மோசடி செய்வதைக் தடுக்கும் வகையில் ஏடிஎம்மில் இரண்டாவது முறை பணமெடுக்க 6 முதல் 12 மணி நேரம் இடைவெளி நிர்ணயிக்க வங்கிகள் பரிசீலனை செய்து வருகின்றன.
டெல்லியில் வங்கிக் கூட்டமைப்புகள் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஏடிஎம் மோசடிகளைக் குறைக்க புதிய விதிமுறைகள் பரிசீலிக்கப்பட்டன. பெரும்பாலான ஏடிஎம் மோசடிகள் நள்ளிரவில் தான் நிகழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவித்து இருப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தனர்.
எனவே, மோசடியை தடுக்க முதல் முறை பணம் எடுப்பதற்கும், இரண்டாவது முறை பணம் எடுப்பதற்கும் இடையே 6 முதல் 12 மணி நேரம் இடைவெளி விதிக்கப்படுவது குறித்து அவர்கள் பரிசீலித்தனர். 18 வங்கிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஒரு வேளை இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க முடியாது.
Discussion about this post