தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் நடவடிக்கைகள் மேற்கொள்ள, எஸ்.பி.ஐ உள்ளிட்ட 13 வங்கிகள், பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளன.
எஸ்.பி.ஐ, பாங்க் ஆஃப் பரோடா, ஃபெடரல் வங்கி உள்ளிட்ட 13 வங்கிகள், பிரிட்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில், இந்திய வங்கிகள் திவால் நடவடிக்கைகள் மேற்கொள்ள, பிரிட்டன் நீதிமன்றத்தில் அனுமதி கோருவது, சட்டவிரோதமானது என விஜய் மல்லையா தரப்பில் கூறப்பட்டது. இதற்கு, வங்கிகள் தரப்பில் அளித்துள்ள பதிலில், பிரிட்டன் சட்டத்தின் கீழ் திவால் நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதி கோர முடியாது என்றும், இந்தியாவில் நடைபெற்று வரும் வழக்கில், பொதுநலனும், பொதுமக்களின் பணமும் சம்பந்தப்பட்டுள்ளதே முறையீட்டிற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Discussion about this post