இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமான, பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும், 41 பேரின் வங்கி கணக்குகளை அந்நாட்டு அரசு முடக்கியுள்ளது.
இலங்கையில் கடந்த மாதம் ஈஸ்டர் நாளில், தேவாலயங்கள், ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த பயங்கர தாக்குதலில் 258 பேர் உயிரிழந்தனர். 500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. எனினும் இந்த குண்டு வெடிப்பை, ஐ.எஸ்., அமைப்புடன் சேர்ந்த, உள்ளூர் பயங்கரவாத அமைப்பு ஒன்று நடத்தியது, விசாரணையில் தெரிந்தது. இந்தகுண்டு வெடிப்பு தொடர்பாக 80க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், உள்ளூர் பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 41 பேரின் வங்கி கணக்குகளை, இலங்கை அரசு முடக்கியுள்ளது.
Discussion about this post