மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு திட்டத்தை கண்டித்து வரும் 26-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஸ்டேட் வங்கிகளையடுத்து பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய வங்கிகளையும் ஒன்றாக இணைக்க கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
இந்த வங்கிகள் இணைப்பைக் கண்டித்து வரும் 26-ம் தேதி நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வங்கி யூனியன் ஒருங்கிணைந்த கூட்டமைப்பில் இருக்கும் அனைத்து யூனியன்களும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால் பணப்பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை உள்ளிட்டவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
Discussion about this post