திருப்பூரில் முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 19 பங்களாதேஷ் இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே சிறுபூலுவப்பட்டி பகுதியில் தங்கியிருந்த பங்களாதேஷ் இளைஞர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் கள்ளத்தோணி மூலம் மேற்குவங்கம் வந்த அவர்கள், அங்கு சில நாட்கள் தங்கி இருந்து போலியாக ஆதார் கார்டு தயாரித்ததாகவும், பின்னர் திருப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. முறையான ஆவணங்கள் இல்லாததால் சுமன், சமீம், அப்துல் கலாம் உள்ளிட்ட 19 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோல் 6 மாதங்களுக்கு முன்பு முறையாக ஆவணங்கள் இல்லாமல் 16 இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post