4 நாள் அரசு முறைப்பயணமாக டெல்லி வந்துள்ள வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வங்கதேசத்திலும், இந்தியாவிலும் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபின் முதன்முறையாக வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய ஷேக் ஹசீனாவை இந்திய அதிகாரிகள் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர். டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெறும் பொருளாதார மாநாட்டில் ஷேக் ஹசீனா பங்கேற்கிறார். சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியுடன் இரு நாடுகளிடையான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்த உள்ளார். இந்தச் சந்திப்பின்போது ஆற்றுநீர்ப் பகிர்வு, ரோகிங்கியா அகதிகளைக் குடியமர்த்தல் உள்ளிட்ட பல்வேறு உடன்பாடுகள் கையெழுத்திடப்படும் எனக் கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் ஷேக் ஹசீனா சந்தித்துப் பேசுகிறார்.
Discussion about this post