கர்நாடக எல்லையில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் மூன்றாவது நாளாக பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.
கர்நாடகாவின் பந்திப்பூர் தேசிய பூங்காவில் நேற்று முன்தினம் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. வறண்ட வானிலை காரணமாக கட்டுக்கடங்காமல் பரவி வரும் தீயால், கெம்பேபுரா, கவுரிகல்லு பெட்டா உள்ளிட்ட வனப் பகுதிகளில் உள்ள அரியவகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் அதிகளவில் எரிந்து சேதமடைந்து வருகின்றன. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தீயை அணைப்பது சவாலாக உள்ளது. வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
Discussion about this post