இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரசித்திபெற்ற பண்டாரநாயகே விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு பின்பு திறக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 350ஐ தாண்டியுள்ளது. இதையடுத்து, தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், விமான நிலையத்தை நோக்கி செல்லும் சாலையில் சந்தேகத்திற்கிடமான வாகனம் சென்றதால் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து விமான நிலையத்தை ஒட்டியுள்ள சாலைகள் மூடப்பட்டு, தற்காலிக தடுப்புகள் அமைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. வாகன நிறுத்தங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. தீவிர சோதனைக்கு பிறகு பண்டாரநாயகே விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.
Discussion about this post