திருப்பூர் அருகே சூறைக்காற்றில் சிக்கி 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து நாசமானது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் இருபது லட்சம் ரூபாய் மதிப்பிலான, பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. அவிநாசி, சேயூர், குரும்பபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக் கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டிருந்தது. சூறாவளிக் காற்று காரணமாக வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.