பெரியகுளம் பகுதியில் வாழை இலை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தேனி மாவட்டம், சுற்றுவட்டார பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக விவசாயிகள் பயிரிடுவது, மா, தென்னை, நெல் பயிர்கள். அடுத்தபடியாக வாழை விவசாயம். இந்தநிலையில், வாழை விவசாயத்தில், வாழைக்காய்கள் அறுவடைக்குப் பின் வாழை இலைகளை வேலையாட்களைக் கொண்டு அறுத்து கட்டுக்கட்டாக கட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சந்தைக்கு அனுப்பி வந்த விவசாயிகளுக்கு வாழை இலையில், போதிய வருமானமின்றி தவித்தனர். இந்தநிலையில், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் ஒழிப்பை தமிழக அரசு முனைப்பாக செயல்படுத்தியதால், பொதுமக்கள் மருத்துவ குணமுடைய வாழை இலைகளை வாங்க தொடங்கியதால் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் வாழை இலை கட்டு ஒன்று ஆயிரம் ரூபாய் வரை விலை போவதால் வாழை இலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post