ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 5 லட்சத்து 25 ஆயிரத்துக்கு வாழைதார்கள் விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தேன்வாழை, மொந்தன், கதளி, பூவாழை உள்ளிட்ட பல்வேறு வாழை ரகங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
சாகுபடி செய்த வாழைகளை கோபி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஏலம் விடப்படுகிறது. வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் போட்டி போட்டுக் கொண்டு வாழைத்தார்கள் விலைக்கு வாங்கப்பட்டன.
வாழைத்தார் ஏலம் விற்பனையில் 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது. இதனால் வழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post