2035-ல் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை !

2035 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பியன் யூனியன் நாடுகளில் புதிய பெட்ரோல், டீசல் ரக கார்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 27 உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பிய யூனியனில், பருவ நிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர் கொள்ளவும், கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ஐரோப்பியன் யூனியன் நாடாளுமன்றத்தில், 2035ம் ஆண்டு முதல் இனி புதிய பெட்ரோல், மற்றும் டீசல் கார்கள் விற்பனக்கு தடை விதிப்பது எனவும், மின்சார வாகனங்களை ஊக்குவிப்பது எனவும் மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால், மார்ச் மாதத்திற்குள் அதிகாரப்பூர்வமாக இறுதி ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version