இந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்ப தடை விதித்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானப்படைகள் பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தன. இதனால் இரு நாட்டுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்ட நிலையில் பாகிஸ்தான் தகவல் தொடர்பு துறை அமைச்சர் சவுத்ரி பாவத் உசேன் இந்திய சினிமா மற்றும் இந்திய தயாரிப்பு விளம்பரங்களை புறக்கணிக்க வேண்டும் என கூறினார். இதுத் தொடர்பான வழக்கு நேற்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைகாட்சிகளில் இந்திய சினிமா, விளம்பரம் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தடை விதித்து 3 பேர் கொண்ட அமர்வு தீர்பளித்துள்ளது. இந்த தீர்ப்பால் எல்லையில் மேலும் பதற்றம் உருவாக வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
Discussion about this post