திருப்பூரில் நலிவடைந்து வரும் மூங்கில் கூடைகள் தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மூங்கில் கூடைகள் பின்னும் தொழில் நடந்து வருகிறது. சுற்றுப்புற சுகாதாரத்தை சீர்குலைக்கும் பிளாஸ்டிக் கூடைகளுக்கு மாற்றுப் பொருளாக இந்த மூங்கில் கூடைகள் பயன்படுத்தப் படுகிறது. தற்போது கூடை பின்னல் தொழில் நலிவடைந்து வருவதாகவும், நலிவிலிருந்து மீட்க விற்பனை சந்தையை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Discussion about this post