பொதுமக்களை ஆகாயமார்க்கமாக அழைத்துச் செல்லும், சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் இன்று தொடங்கியது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், கடந்த 5 ஆண்டுகளாக சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. 6-வது ஆண்டாக பலூன் திருவிழா, கோவை-பொள்ளாச்சி சாலை மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த விழாவில், நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் கொண்டுவரப்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
பொதுமக்களை சுமந்து கொண்டு வானில் பறக்கும் பலூன்களை இயக்க, வெளிநாடுகளில் சிறப்பு பயிற்சி பெற்ற பைலட்டுகள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். காலை விழா தொடங்கியதும், வெப்பக்காற்று நிரப்பப்பட்ட பலூன்கள், பொதுமக்களை சுமந்து கொண்டு வானில் பறந்தது. அதைக் கண்ட பொள்ளாட்சி மக்கள் பிரமிப்பில் ஆழ்ந்தனர். இன்று தொடங்கி உள்ள இந்த விழா, வரும் 15-ம் தேதி வரை நடைபெறும். காற்றின் வேகம் குறைவான காலை நேரத்தில் வானில் பறக்க விடப்படும் பலூன்கள், மாலை நேரங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post