pulsar பைக்குகளின் விலை உயர்வு!
bajaj நிறுவனத்தின் புகழ்பெற்ற பைக் pulsar. அது மட்டுமின்றி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் pulsar பைக்கும் ஒன்று.இருசக்கர வாகனங்களின் விற்பனைப் பட்டியலில் bajaj pulsar பைக் 5ம் இடத்தைப் பிடித்திருந்தது.
BS-4 தரத்திலான எஞ்ஜினைக் கொண்ட வாகனங்கள் வரும் 2020ம் ஆண்டு முதல் விற்பனைச் செய்ய தடைவிதிக்கப்பட உள்ளது. ஆகையால் bajaj நிறுவனம் அதன் அனைத்து pulsar மாடல் பைக்குகளை BS-6 தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதனால் pulsar பைக்குகளின் விலை 10 % முதல் 15 % வரை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
Discussion about this post