செங்கல்பட்டு அருகே குடும்ப சூழ்நிலையால் வளைகாப்பு செய்யமுடியாமல் இருந்த பெண் காவலருக்கு, காவல்நிலையத்தில் பணியாற்றும் சக காவலர்கள் இணைந்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியது, அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த இலங்கியா என்பவர், செங்கல்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றிவருகிறார். இவரது கணவர் ராசு என்பவர் தனியார் அரிசி ஆலையில் கணக்காளராக பணியாற்றிவருகிறார். இந்நிலையில், பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இலக்கியாவும் – ராசுவும் திருமணம் செய்துகொண்டனர். தற்போது, 9 மாத கர்ப்பிணியாக உள்ள இலக்கியாவுக்கு, குடும்ப சூழ்நிலையால் வளைகாப்பு நிகழ்ச்சி நடைத்தமுடியாமல் இருந்தது. இலக்கியாவின் குடும்ப சூழலை அறிந்த சக காவலர்கள், தங்களது சொந்த செலவில், காவல் நிலையத்திலேயே அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். சக காவலர்கள் இணைந்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியது அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post