உதகையில், விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். சில சமயங்களில், சுற்றுலா வரும் வாகனங்கள் அதிக வேகத்தோடு இயக்கப்படுவதால், விபத்துக்குள்ளாவதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்நிலையில் இதைக் கட்டுப்படுத்தும் வகையில் , உதகையில்,வாகனங்களின் வேகத்தை தெரிந்துக் கொள்வதற்காக புதிய கருவியைக் கொண்டு சோதனை செய்யும் முறை தொடங்கப்பட்டுள்ளது . இதனை மாவட்ட கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன
Discussion about this post