திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கைக்காக ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு எல்கேஜி, யூகேஜி தொடங்கிய நிலையில் புத்தகம், நோட்டு, பை, சீருடை, காலணி, மற்றும் இதர பொருட்களை அரசு வழங்கி வருகிறது. கல்வித் தொகையை பெறுவது குறித்து அறிவுரை வழங்கப்படுகிறது. இவற்றை எல்லாம் எடுத்துக் கூறி குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆசிரியர், ஆசிரியைகள் வீடு வீடாக சென்று பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Discussion about this post