பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக நியூசிலாந்தில் நடைபெற்ற பிரமாண்டப் பேரணியில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஸ்வீடனைச் சேர்ந்த பள்ளி மாணவியான கிரேட்டா தன்பர்க், உலக வெப்பமயமாதலுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இதற்காக அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தி வருகிறார். அதன்படி, நியூசிலாந்தில் பருவ நிலை மாற்றம் தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் எடுக்க கோரி பிரமாண்ட பேரணி நடைபெற்றது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி அந்நாட்டு நாடாளுமன்றம் நோக்கி 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பேரணி சென்றனர். பிரமாண்டப் பேரணியை முன்னிட்டு நியூசிலாந்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. இந்த நிலையில், நியூசிலாந்தைத் தொடர்ந்து சில நாடுகளும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.
Discussion about this post