விழுப்புரத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான புதுமணத் தம்பதியினர் கலந்து கொண்டனர்
சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணியை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். 200க்கும் மேற்பட்ட புதுமண தம்பதியினர் பங்கேற்ற இப்பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்று விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் நிறைவடைந்தது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலத்தினர் கலந்து கொண்டனர்.
Discussion about this post