100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தியும் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்பதை வலியுறுத்தியும் திருவள்ளூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவிகித வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் படி திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஜனநாயக கடமையான வாக்களிப்பை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்றும், மத்தியில் யார் ஆள வேண்டும் என்பதை உறுதி செய்து அவர்களுக்கு எந்த வித அச்சுறுத்தலுமின்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் இந்த பேரணியின் போது வலியுறுத்தப்பட்டது.
Discussion about this post