கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வனப்பகுதியில், வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மக்காத கழிவுகளை அகற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார். வனப்பகுதிக்குள் கழிவுகளை வீசுவது தண்டனைக்குரிய குற்றம் என்பதை சுற்றுலாப் பயணிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் கூறினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் வனத்துறையினர் பங்கேற்றனர்.
Discussion about this post